டாப் 10 கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து அதானியை பின்னுக்கு தள்ளி ஒன்பதாவது இடத்திற்கு அம்பானி முன்னேறினார். அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. குழுமத்தில் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20% வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை நோக்கி வருகிறது.

இந்நிலையில் உலக பணக்காரர் பட்டியலில் அதானி 15 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். பத்தாவது இடத்தில் இருந்து தொழிலதிபர் முகேஷ் அம்பானி பணக்காரர் பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். சொத்து மதிப்பு சரிவால் பணக்காரர்கள் பட்டியலில் ஒரே வாரத்தில் 3-து இடத்தில் இருந்து 15 வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார். அதானி குழும பங்குகளின் சரிவால் கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் மளமளவென சரிந்துள்ளது.