நாட்டில் தற்போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகள் குறித்து நிதி அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சிக்காக PMKVY 4.0 தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதில் AI, Robotics, Coding ஆகியவை கற்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசு சார்பாக உதவி வழங்கப்படும் எனவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். போக்குவரத்து துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் விதமாக 50 கூடுதல் விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபோர்டுகள் புணரமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.