டெல்லியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்கத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றும் முயற்சியில் பல எண்ணற்ற மாற்றங்களை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதனால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வருடம் டெல்லியில் மெய்நிகர் பள்ளி தொடங்கப்பட்ட நிலையில் அதன் மூலம் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் பங்கேற்கலாம். அரசின் நடவடிக்கையால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நெல்லி அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களின் செயல் திறனை மேம்படுத்தும் விதமாக கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சுமார் 6112 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மார்ச் மாதத்திற்குள் மேலும் 2200 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மாதங்களில் மொத்தம் இருந்த 24,003 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 17,891 ஆக தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.