விண்வெளியில் முதல் இந்திய பெண்மணியாக நுழைந்தவர், பெண்களும் விண்ணுக்கு வரை செல்லலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவர், விண்வெளியில் பல சாதனைகளை புரிந்த பெண்மணி இவர். எதிர்பாராவிதமாக விண்வெளி பயணத்தை முடித்து கீழே இறங்கிய போது விண்கலம் பேரிடரை சந்தித்தது. ஜனவரி 16 2003ஆம் நாளன்று கென்னடி விண்வெளி மையத்திலிருந்து கொலம்பியா புறப்பட்டது. இது கமாண்டோ வில்லியம் மைக்கேல், கமெண்டல் லாரல், கல்பனா சாவ்லா என ஏழு விண்வெளி வீரர்களை ஏற்றி சென்றது. விண்வெளியில் இவர்களது பயணம் 16 நாட்களாக அமைந்தது.

இவர்கள் விண்வெளியில் பல அறிவியல் சோதனைகளை மேற்கொண்டு வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்தனர். விண்வெளியில் ஏவப்பட்ட 81.7 வினாடிகளில் விமானம் அதனது எரிபொருள் இருக்கும் இடமானது வெடித்து ஆபத்தை உண்டாக்கியது. அதன் பின் 20,000 மீட்டர் வேகத்தில் மணிக்கு 2649 கிலோமீட்டரில் கொலம்பியா சென்றது. இந்த நிகழ்வு நடந்த போது விண்வெளியில் இருப்பவர்களுக்கும் பூமியில் இருப்பவர்களுக்கும் அது ஆபத்தானது என்று தெரியாது.

இந்த சேதம் மிக கடுமையானதாக அமைந்தது. மேலும் இது பூமியில் வளிமண்டலத்தை அடையும் போது 2800 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக சூடேற்றப்பட்ட காற்று விமானத்தில் இறக்கைக்குள் சுழன்று அதன் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஃப்ளோரிடாவில் தரை இறங்கும் சமயத்தில் கலிபோர்னியாவை கடந்து வரும்போது விண்கலம் விபத்துக்குள்ளாகி அதில் உள்ள பாகங்கள் உடைக்கப்பட்டது.

மேலும் விண்கலம் தென்மேற்கு அமெரிக்காவைக் கடக்கும் போது அதன் உதிரி பாகங்கள் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் மிகப் பேரழிவை உண்டாக்கி ஆர்பிட் ஆவின் இழப்பிலிருந்து விண்வெளி வீரர்கள் தப்பிக்க முடியாத நிலை உண்டானது. இந்த விபத்தில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். வீரமங்கை கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்று வீடு திரும்பாமல் இதோடு 20 வருடங்கள் ஆகிறது.