புதிதாக நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அன்பிற்கினிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். நாம் தமிழர் கட்சி அதுல நாமெல்லாம் இணைகின்றோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கக் கூடாது. நாமெல்லாம் இணைந்து இந்த நாட்டுக்கும்,  மக்களுக்கும் ஒரு கட்சியை உருவாக்குகின்றோம்,  அதுதான் உண்மையான உண்மை.

அதை நீங்கள் நல்லா விளங்கிக்கனும். இந்த நிலத்தில் இருந்திருக்கின்ற வேண்டிய அரசியல் நாம் முன்னெடுக்கின்ற இந்த அரசியல் தான் இருந்திருக்க வேண்டும். அது கெடு வாய்ப்பாக அமையவில்லை. இந்தியர் என்று ஒரு கூட்டம் நம்மளை கற்பித்தது. அதற்கு இந்தி தான் மொழி,  சமஸ்கிருதம் தான் மொழி. மத்ததெல்லாம் அதுக்கு ஒரு பொருட்டல்ல. இந்தியனா இந்தி பேசுறவன் தான் இந்தியன்.  அவர்கள் இந்தி பேசுகின்ற மாநிலங்கள் தான் இந்தியன்.
நம்மளை எல்லாம் இந்த நாட்டுக்குள்ள வச்சிருக்கறது நம்முடைய வரிக்கும்,  நம்ம நிலத்தில் இருக்கின்ற வளத்தை சுரண்டுவதற்கும்தான்,  வேறு எதுக்கும் இல்லை. நீங்களும் நானும் அவனுக்கு ஒரு உயிர் கிடையாது, ஒரு ஓட்டு அவ்வளவுதான். அதை மெஷினே போட்டுவிடும் என்றால் நாம் எல்லாம் இருந்தால் என்ன ? செத்தால்  என்ன? என்று போய்விடுவான்.
கால போக்கில் நீங்களே தெரிஞ்சிருப்பிங்க…  ஆழ்ந்து பார்த்தால் தெரியும். அப்புறம் ஒரு கூட்டம்  நம்மளை  திராவிடம்,  திராவிடம் என  சொல்லிச்சு. அது ஒரு பெரும் கொள்ளை கூட்டம். அது நீண்ட காலமா இல்லாத ஒரு தத்துவத்தை கற்பித்து,  யாரு திராவிடம் என தெரிஞ்சு ஒரு வாக்கு ஓட்டு போடுவது… யாரும் வாக்கு செலுத்துவது இல்லை என தெரிவித்தார்.