கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 18-ஆம் தேதி சனிக்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அதனை ஈடு செய்யும் விதமாக வருகிற மார்ச் மாதம் 25-ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாகும். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலகங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.