ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது . இந்நிலையில் சேஷன் நகர் பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை ஒரு பசுமாடு காணாமல் போனது. மற்றொரு மாட்டின் பின்பகுதி ரத்த காயத்துடன் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவராஜ் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் கால்நடை டாக்டர் காயமடைந்த பசுமாடுக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் காணாமல் போன மாட்டை தேடும்போது மானாவரி நிலத்தில் ஒரு பசு மாடு இறந்து கிடந்தது. அதன் பின்பகுதி கடித்து குதறப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வனத்துறையினர் அதன் அருகே இருந்த கால்தடத்தை ஆய்வு செய்த போது புலி தான் சிவராஜின் பசுமாட்டை இழுத்து சென்று அடித்து கொன்றது தெரியவந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.