சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப்படை போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த போரை உடனடியாக நிறுத்தி அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யாவுக்கு தொடர்ந்து சீனா ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில் அமைதி பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சீனா அதிபரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களின் சந்திப்பின்போது ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இருப்பினும் எப்போது இந்த சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை. முன்னதாக உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஐநாவில் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.