உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதில் உக்ரைனின் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டு மக்களின் அன்றாட வாழ்வு முற்றிலுமாக உருகுலைந்துள்ளது இதனை சரி செய்வதற்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உக்கிரேனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு செய்யும் தினமான பிப்ரவரி 24ஆம் தேதி அன்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் ஜி 7 மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அவர்களின் தலைமையில் ஜி 7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் காணொளி மூலமாக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ரஷ்ய நாட்டின் மீது கூடுதலான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஜி 7 நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.