பப்புவா நியூ கினியா பகுதியில் நியூ பிரிட்டன் தீவு கூட்டம் அமைந்துள்ளது. இந்த நியூ பிரிட்டன் நகரில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நகரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் ரிக்டர் அளவில் 6.5 ஆகவும் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட அதிர்வில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டு சேத விவரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.