ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.14 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பைசாபாத் நகரில் இருந்து கிழக்கில் 273 கிலோ மீட்டர் தொலைவிலும் 180 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாகவும் ரிக்டர் அளவில் 4.3 ஆகவும் பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.