இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அந்நாடுகளில் உள்ள மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான சனா அம்ஜத் என்பவர் இளைஞர் ஒருவரிடம் பேட்டி எடுத்த வீடியோவை தனது youtube பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த இளைஞர் கூறியதாவது “பாகிஸ்தானுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக இருந்தால் நான் நமது நாட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நம் நாட்டிற்கு மோடி போன்ற பிரதமர் வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அதே பாகிஸ்தான் இளைஞர் பிரதமர் மோடியை பாராட்டி பேசிய மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அதில் அவர் கூறியிருப்பதாவது “நான் முதலில் பேட்டியளித்த போது சிலர் என்னிடம் வந்து ஒரு பாகிஸ்தானியராக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் நான் மோடி குறித்து பேசியது அனைத்தும் உண்மை. கடந்த எட்டு ஆண்டுகளில் மோடி தனது நாட்டை சரி செய்து உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார். முன்பு இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பேசுவார்கள்.

ஆனால் தற்போது ஒப்பிட முடியாத அளவிற்கு இந்தியா உயர்ந்துள்ளது. வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களிலும் இந்தியர்கள் முதன்மையாக இருக்கின்றனர். மோடி தனது நாட்டிற்காக உழைத்து உள்ளார். அவரை எனக்கு பிடிக்கும் நான் அவரை நேசிக்கிறேன். நமக்கு மோடி போன்ற பிரதமர் கிடைத்திருந்தால் பெனாசீர் புட்டோ, நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் போன்ற பிரதமர்களும் பர்வேஸ் முஷாரப் போன்ற அதிபர்களும் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள்” என அந்த இளைஞர் நெகழ்ச்சியுடன் கூறியுள்ளார்.