உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அமேசான், கூகுள், ஷேர் சாட், மைக்ரோசாப்ட் போன்ற பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.‌‌ இந்நிலையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் 1200 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ரோபோக்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

அதாவது கூகுள் நிறுவனத்தின் கேண்டீன்களில் ரோபோக்கள் பணியாற்றுகிறது. இந்த ரோபோக்கள் கூகுள் உணவ டேபிள்களை தினமும் சுத்தம் செய்கிறது. இந்த ரோபோக்களை தற்போது கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஒரு அங்கமாகவே ரோபோக்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்றின் போது இந்த ரோபோக்கள் மிகச் சிறந்த சேவையை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.