பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை கும்பல் ஒன்று பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல யூடியூபர் தாவூத் அகுண்ட்சாடா இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கோவாவுக்கு சென்று அவர் வீடியோ எடுத்து தனது youtube பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பகுதிக்குச் சென்ற அவர் அங்கு இருந்த ஹோட்டலில் சிலர் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றார்.

நியூசிலாந்து பாகிஸ்தானிடையே போட்டி நடந்து கொண்டிருந்த நிலையில் அவர் நீங்கள் எந்த அணிக்கு ஆதரவு என கேட்டு இருக்கின்றார். அதற்கு அந்த ஹோட்டல் உரிமையாளர் பாகிஸ்தான் என்றார். அதை தொடர்ந்து அந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளரை பரபரப்பான சாலையில் கும்பல் ஒன்று சிறை பிடித்தது. மேலும் அந்தக் கடத்தல் கும்பல் ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது. இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளார்கள்.