உக்ரைன் போரில் சீனா ரஷ்யா பக்கம் சாய்வதற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்றோடு 367 நாள் ஆகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரில் உக்கிரைனுக்கு அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அதே வேளை உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்கினால் அது அமெரிக்கா மேற்கத்திய நாடுகளின் நேரடி எதிர்ப்பை வெளிப்படுத்தம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீனா குறித்து அதிபர் பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் போரில் சீனா ரஷ்ய பக்கம் சாய்வதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என கூறினார்.