தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சாயாஜி ஷிண்டே. இவர் தமிழ் உட்பட மராத்தி, ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் அழகிய தமிழ் மகன், வேலாயுதம், வேட்டைக்காரன் மற்றும் பாரதி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதயகுழாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sayaji Shinde (@sayaji_shinde)