விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும் நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி வெளியாகி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

அதாவது இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு அரசியல் மோசம் என்று சொல்பவர்கள் மற்றும் அரசியல் மோசம் என சொல்வது தவறானது என்று விவாதம் நடைபெற்று உள்ளது.. அப்போது அரங்கத்தில் உள்ள நபர் ஒருவர் அரசு இலவசமிட்டு கொடுக்கும் பொருட்களை வாங்க கூடாது என்று ஆவேசப்பட்டார். இதற்கு கோபிநாத் தரமான பதிலடி கொடுத்த நிலையில் தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.