இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்பத்தாளர்கள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை ஜூன் 13 முதல் 83 பாடங்களில் மொத்தம் 83 பாடங்களுக்கு 22 ஆவது யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தியது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணியிடத்திற்கு இந்த தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.