மாமன்னன் திரைப்படம் குறித்து நக்கலாக பேசிய யூடியூபரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வரும் திரைப்படம் மாமன்னன். படம் வெளியான நாள் முதல் படம் குறித்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. படத்தில் பல வசனங்கள், காட்சிகள், பலரை கவர்ந்திருந்தாலும் இடைவெளி நேரத்தில் வரக்கூடிய காட்சி பலருக்கும் பிடித்தமான ஒன்றாக அமைந்திருந்தது.

 இருப்பினும் அந்த காட்சியையும் நெட்டிசன்கள்  சிலர் கலாய்த்து வருவதை காண முடிந்தது. அந்த வரிசையில், யூடியூபில் வீடியோ வெளியிடக்கூடிய காத்து கருப்பு கலை என்ற நபர் மாமன்னன் திரைப்படம் குறித்து தனது கருத்தினை தெரிவிக்கையில்,

படத்தின் இடைவெளியில் வரக்கூடிய நாற்காலியில் அமரும் காட்சியை தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்த பெண் செய்த செயலோடு ஒப்பிட்டு நக்கலாக பேசியிருந்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவ, படத்தின் கதாநாயகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்  வீடியோவை பார்த்து சிரித்தபடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.