
செய்தியாளர்களிடம் பேசிய தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலில் இந்தியா கூட்டணி கடைசி வரைக்கும் உறுதியான கூட்டணியா என்பதே இங்கு கேள்விக்குறியா இருக்கு. ஏன்னா இன்னைக்கு அதில் இருக்கின்ற அத்தனை மாநில முதலமைச்சர்களுமே அடுத்த பிரைம் மினிஸ்டர் நான் தான்னு சொல்லிட்டு இருக்காங்க. அத்தனை பேருமே…. யாராவது ஒருத்தர் தான் வர முடியும். பல்வேறு முரண்பாடுகள் அந்த கூட்டணியிலே இருக்கிறது.
எனவே அந்த கூட்டணி இறுதிவரை செல்லுமா ? யார் பிரதம வேட்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கணும். அப்போதான் அந்த கூட்டணி பற்றி நாம் எதுவுமே சொல்ல முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆல்ரெடி திரு மோடி ஜி இருக்காங்க. அவங்க இன்னைக்கு தனியா இருக்காங்க. அதனால் பொறுத்து இருந்து பார்ப்போம். நிச்சயமாக எந்த கூட்டணி சரியான கூட்டணி…. இறுதியாக யார் வெல்லப் போகிறார்கள் என்பதை ஜனவரி வாக்குல நாம முடிவெடுத்தால் சரியாக இருக்கும்.
உதயநிதியை தவிர வேறு யாருமே இப்ப நீட்டை பத்தி பேசல. 50 லட்சம் கையெழுத்து என்கிறார். இது எல்லாமே கண்தொடைப்பாக நான் பார்க்கிறேன். நேற்றே இதற்கான பதிலை நான் சொல்லிட்டேன். மாணவர்களை குழப்பாமல் இருந்தாலே போதும். அவங்க படிச்சு தேர்வு எழுத தயாராகி விடுவார்கள். நீட் எக்ஸாம் வராது வராதுன்னு சொல்லி…. மாணவர்களை குழப்பி….. அவங்கள படிக்கவும் விடாமல், ஒரு தெளிவான முடிவு எடுக்க விடாமல் செய்வது உதயநிதி.
அவர் ஒரு எங்ஸ்டர். மாணவர்களை சரியான பாதையில் அவர் வழி நடத்தணும். இன்னைக்கு இந்தியா முழுக்க நீட்டு இருக்கு. உச்சநீதிமன்றம் உறுதியாக இருக்கும்ன்னு சொல்லிட்டாங்க…. அப்புறம் எதுக்கு அத பத்தி அவங்க பேசுறாங்க என்பது புரியல ? நிச்சயமாக நீட் எக்ஸாம் அப்படின்னு ஒன்னு ஒழிக்க முடியுமா ? என்பது பெரிய கேள்விக்குறி. அதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தெளிவாகிட்டாங்க… நிச்சயமாக நீட் எக்ஸாம்யை ஒழிப்பது கடினம் என தெரிவித்தார்.