தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, தங்கள் தலைவர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளுடன், ஒரு தனித்துவமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவி உடையில் தோன்றிய ஒரு தொண்டர், விஜய்யின் புகைப்படத்தை கழுத்தில் அணிந்து, வேடிக்கையாகவும், வித்தியாசமாகவும் வசனம் பேசி நடித்த காணொளி எக்ஸ் தளத்தில் பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதோ ஆரம்பிச்சுட்டானுகள 😂😂😂😂#TVKVijayMaanadu pic.twitter.com/fsf766oqcJ
— Ajitheyy 𝕏 (@Ajitheyyyy) August 20, 2025
