தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதில் பங்கேற்க குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநாட்டுத் திடலில் பத்திரிக்கையாளர் முக்தார் என்பவர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக பேசுபவர் என்று கூறி கட்சி தொண்டர்களால் அதிரடியாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தொண்டர்கள் ஒழுங்கு மற்றும் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைவர் விஜய் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்தச் சம்பவம் கட்சியின் ஒழுங்கு மற்றும் பொறுப்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.