மதுரை அருகே பாரப்பத்தி கிராமத்தில் இன்று நடைபெறும் தமிழகம் வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு, அதிகாலையிலிருந்தே பல்லாயிரக்கணக்கான விஜய் ஆதரவாளர்கள் குவிந்து உள்ளனர்.
கடும் வெயிலும், கூட்ட நெரிசலும் நிலவியதால், விழா தளத்தில் குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், விழா தளத்திற்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடை காலை 12 மணியை கடந்தும் திறக்கப்படாததால், பலர் வெளியே நின்று தவித்தனர். “QR கோடு வேலை செய்யவில்லை” என்ற காரணத்தால் விநியோகம் தாமதம் ஏற்பட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் தொடர்ந்து மதுவுக்கு எதிரான கருத்துகளை வலியுறுத்தி வந்துள்ள நிலையில், அவரது கட்சி மாநாட்டுக்கு வந்த சிலர் டாஸ்மாக் முன் காத்திருந்து சென்று இருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது. அதிலும், மாநாட்டுக்காக உள்ளூர் வசதிகள் ஒழுங்குபடுத்தப்படாத சூழலில், சிலர் மதுவை நாடியது தலைமை அறிவுறுத்தலை மீறியதையே காட்டுகிறது என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
