கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. நேற்று மதியம் கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உழவர் சந்தை அருகே சென்ற போது சிக்னல் போடப்பட்டது. ஆனால் பேருந்து ஓட்டுனர் அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக சிக்னலில் நிற்காமல் பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.

இதனை பார்த்ததும் பணியில் இருந்த போலீஸ்காரர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி பீச் ரோடு சாலையில் இருக்கும் சிக்னல் அருகே வைத்து சப்-இன்ஸ்பெக்டர் தனியார் பேருந்தை வழிமறித்து 500 ரூபாய் அபராதம் விதித்தார். இதுபோன்று போக்குவரத்து விதிமுறையை கடைபிடிக்காமல் பேருந்தை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.