
ஈரோடு மாநகர் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபர்கள், சிக்னல்களை மீறுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டினால் போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கின்றனர்.
இதே போல் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். ஈரோட்டில் 9 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்கூறிய 10 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.