தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வெறுப்பு அரசியலுக்கு… அவதூறுகளை பரப்புவதற்கு… ஒன்று மதமாற்றம், இரண்டாவது புனித பசு, மூன்றாவது லவ் ஜிகாத். இந்த மூன்றையும் திட்டமிட்டு பரப்பி,  சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பை விதைப்பதன் மூலம் அவர்கள் எதை விதைக்க விரும்புகிறார்கள் என்றால் ? நான் இந்து என்று அவனை உணர வைக்கின்ற அரசியலை செய்கிறார்கள்.

இந்து சமூகத்தின் ”சனாதான தர்மம்” நீண்ட நெடுங்காலமாக பாகுபாடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது.ஐயா திருவடிக்குடில் சுவாமிகள் அதை உணர்ந்தவர். அதை உணர்ந்தவர் அதனால் தான் இன்றைக்கு நிலவிலே நம்முடைய முத்திரை பதித்த இடத்தை கூட சமத்துவ புள்ளி என்று பெயர் வைக்க வேண்டும். அதை ஏன் நீ போய் மத அடையாளத்தில் சிவசக்தி என்ற பெயர் சூட்ட பார்க்கிறாய்..  அந்த அடையாளம் வேண்டாம் என்று அவர் சொல்லுகிறார் என்றால் ?

அவரது பார்வையில் சகோதரத்துவமும் – சமத்துவமும் இருக்கின்றது.  அவர் சைவத்தை பின்பற்றக் கூடியவராக இருந்தாலும்…. சிவனை வழிபடக்கூடியவராக இருந்தாலும்… வேல் முருகா, வெற்றி வேல் முருகா என்று முருகனை வழிபடக்கூடியவராக இருந்தாலும்….  சகோதரத்துவம் முதன்மையானது,  சமத்துவம் நமது இலக்கு என்பதை உணர்ந்த நிலையில் அவர் இதை சுட்டிக் காட்டுகிறார்.

ஆக அவர்கள் இங்கே வெறுப்பை விதைப்பது… இந்து என்கிற உணர்வை அவர்களுக்கு ஊட்டுவதற்காக…. இந்து என்கிற உணர்வை ஊட்ட வேண்டுமானால் ? முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பும் தேவைப்படுகிறது. ஒரு யுக்தி இது. இது ஸ்டேட்டர்ஜி. இந்துக்களை அணிதிரட்டுவதற்காக…. முஸ்லிமை பலிகடா ஆக்குவது…

இந்துக்களை அணி திரட்டுவதற்காக கிருத்துவர்களை பலிகடாக்குவது…. இந்துக்களை அணி திரட்டுவதற்காக தேவாலயங்களை தகர்ப்பது, இந்துக்களை அணி திரட்டுவதற்காக மசூதிகளை இடிப்பது, இந்துக்களை அணி திரட்டுவதற்காக ராமர் பெயரை உச்சரிப்பது, இந்துக்களை அணி திரட்டுவதற்காக ராமர் கோயில் கட்டுவது, இதெல்லாம் ராமர் மீதுள்ள பற்றால் அல்ல. இந்து மதத்தின் மீதுள்ள பற்றால் அல்ல… இவை அனைத்தும் வாக்குவங்கிக்காக என தெரிவித்தார்.