ஓசூரை சுற்றிலும் ஏராளமான சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் ஆட்டோமொபைல், ராணுவம், மருத்துவம், மின் மற்றும் மின்னணு தொழில்களுக்கான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓசூரில் தொழிற்சாலைகள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதே சமயம் தொழில்களை விரிவு படுத்துவதற்காகவும், நிலங்கள் கிடைப்பதிலும் நிலங்களின் விலை உயர்வாலும் அடுத்த கட்ட தொழில் வளர்ச்சி எட்டுவது மிகவும் சிரமமாக இருக்கிறது.

எனவே தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலங்களின் பற்றாக்குறை கருத்தில் கொண்டு அடுக்குமாடி தொழில்மனைகள் என்ற வாய்ப்பை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிற்பேட்டையில் அடுக்குமாடி தொழில் மையங்களை அமைக்க திட்ட அறிக்கையை உருவாக்கி உள்ளது. சிறு தொழில் வளர்ச்சி வங்கி நிதி உதவியிடம் ரூ.26.24 கோடியில் அடுக்குமாடி  தொழில்மனை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.