தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது சைரன், ரகு தாத்தா, மாமன்னன், ரிவால்வர் ரீட்டா மற்றும் தசரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் தசரா திரைப்படம் மார்ச் 30-ம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நாணி ஹீரோவாக நடித்துள்ள நிலையில், வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மனதுக்கு தசரா படம் மிகவும் நெருக்கமான படமாம். இதனால் தசரா படத்தில் பணியாற்றிய 130 பேருக்கு 10 கிராம் தங்கம் வழங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இன்றைய நிலவரப்படி அதன் மொத்த மதிப்பு ரூ. 75 லட்சம். மேலும் இதற்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷ் மகாநதி படத்தில் நடித்த போதும் படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு தங்கம் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.