தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. நடிகர் பாலகிருஷ்ணா நிஜ வாழ்க்கையில் பல நபர்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்கி வருகிறார். நடிகர் பாலகிருஷ்ணா பசவதாரம் என்ற மருத்துவமனையின் சேர்மனாக இருக்கிறார். இந்த மருத்துவமனையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும் என பாலகிருஷ்ணா தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாலகிருஷ்ணாவின் அண்ணன் மகன் நடிகர் தாரக ரத்னா சமீபத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு 40 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் காரணமாக தற்போது இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு இதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச மருத்துவமனை இந்துப்பூரிலும் பாலகிருஷ்ணா தற்போது கட்டியுள்ள மருத்துவமனையிலும் வழங்கப்படும். இலவச சிகிச்சை வழங்க மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பாலகிருஷ்ணா தரப்பில் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழை மக்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை வழங்கப்படும் என பாலகிருஷ்ணா அறிவித்துள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.