நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

இதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளதாக போலீசார் புதிய தகவலை தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் ஜெயக்குமார் மரணத்தில் புதுப்புது தகவல்கள் வெளியாகி கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்துகிறது.