கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி,   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மதத்திற்கும்,  சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மக்களையும் துணையாக சமமாக மதிக்க கூடிய இயக்கம்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம் அவரவர் வைக்கின்ற மதம் புனிதமானது. அதை யாரும் குறுக்கிடுவதற்கு  உரிமை கிடையாது. இது மிகப்பெரிய ஜனநாயக நாடு.

இந்த மிக பெரிய ஜனநாயக நாட்டில் அவரவர் மதத்தைச் சார்ந்தவர்….  அவரவர் கடவுளை வணங்குவது அவர்களின் சுதந்திரம். அதைத்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதே போல இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் அமைப்பதற்கு முன்பாக 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது…..

திமுக தலைவர் திரு ஸ்டாலின் சுமார் 520 அறிவிப்புகளை வெளியிட்டார். இப்பொழுது 100% நிறைவேற்றப்பட்டதாக ஒரு பச்சை பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றார்.  ஏதோ ஒரு சில அறிவிப்புகளை நிறைவேற்றி இருக்கின்றார், அதை நான் இல்லை என்று சொல்லவில்லை. அதிலே தமிழகத்திலே ஓடுகின்ற நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று ஒரு அறிவிப்பு. ஆனால் இப்பொழுது என்ன நிலைமை ?

தமிழகத்தில் இயக்கிக் கொண்டு இருக்கின்ற அரசினுடைய நகரப் பேருந்துகளில் முன்புறம்,  பின்புறம்  ஒரு பெயிண்ட் அடிச்சு இருக்காங்க. பிங்க் கலர்ல பெயிண்ட் அடிச்சு இருக்காங்க. அந்தப் பேருந்தில் பெண்கள் ஏறினால் தான் கட்டணமில்லாமல் பயணம் செய்ய முடியும். எவ்வளவு தந்திரமா மக்கள் கிட்ட ஏமாற்றி இருக்காங்க பாருங்க. பெண்களை எவ்வளவு எளிதாக ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நான் கூட சட்டமன்றத்தில் பேசினேன். தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் அரசின் மூலமாக இயக்கப்படுகின்ற நகர பேருந்துகளில் எந்த பேருந்தில் பெண்கள் ஏறினாலும் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் செய்யலாம் என்றுதானே தேர்தல் குறிப்பிட்டீர்கள். ஆனால் பேருந்தினுடைய முன் பகுதியிலும்,  பின்பகுதியிலும் பின்ங் கலர் அடித்த பேருந்தில் ஏறினால் தான் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்று பெண்கள் குறிப்பிடுகிறார்கள். அதுதான் நடைமுறையில் இருக்கிறது என்று சொன்னவுடன்,

அந்த அமைச்சர் எழுந்து நீங்கள் வாருங்கள்… நான் அழைத்து செல்கின்றேன். எங்கே அப்படி இருக்கிறது என்று கேட்கிறார் ? உண்மையில் அப்படித்தான் இருக்கிறது…. சொல்லுங்க பெண்கள் எல்லாம் வந்திருக்கீங்களா ? அந்த நகர பேருந்தில்…. அரசு இயக்குன்ற நகரப் பேருந்தில் முன் பகுதியும்,  பின்பகுதியும் பிங்க்  கலரில் அடித்த பேருந்தில் ஏறினால் தான் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய முடியும். எவ்வளவு பச்ச பொய் சட்டமன்றத்திலே பதிவாகி இருக்கு மறக்க முடியாது என தெரிவித்தார்.