கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 26 ஆம் தேதி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் வகையில் தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறைக்கு ஈடாக வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போலவே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு டிசம்பர் 26ஆம் தேதி இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார் . கீழக்கரை திருபுத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மங்கல நாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனவும் அதனை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 6ஆம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
