தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  தொற்று பரவாமல் இருப்பதற்கு தான் இந்த நடவடிக்கைகள்…. எங்கேயும் தொற்று பரவல… இன்னமும் கூட நடவடிக்கைக்கு 20 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் முதலமைச்சர் உத்தரவு போட்டுள்ளார். இப்ப பாத்தீங்கன்னா…. ஆத்தூரில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதனால் இப்போது தூத்துக்குடிக்கும்,  பெரும்பகுதியான இடங்களுக்கு பிரதான குடிநீர் குழாய்கள் மூலமாக தண்ணீர் கிடைக்கல.

அவங்க சொந்தநீர் ஆதாரத்தை வைத்துதான் தண்ணீர்  பருகுகிறார்கள்… வெளியில் இருந்து… ஆறிலிருந்து… கிணற்றில் இருந்து… போர் நீர்… கிணற்று நீர்…. இதையெல்லாம குளோரின் அளவு சரியாக இருக்கான்னு பார்க்கணும்….. ஏன்னா குளோரின்ல தான் டையேறியா உருவாகும்… குளோரின் அளவு சரியா இருக்கான்னு பாக்கணும். அந்த வகையில் இன்னைக்கு பிற்பகலில்  40 லட்சம் டேப்லெட் வருது.

சென்னையில் இருந்து வந்துட்டு இருக்கு…  பிற்பகலுக்கு அப்புறம் எங்கேயாவது ஒரு குடியிருப்பு பகுதியில் கொடுத்து அதை தொடங்க போகின்றோம்…  ஒவ்வொரு வீட்டுக்கும் 10,  10 டேப்லட் தரப்போறோம்…  200 எம்எல் இருக்குற தண்ணீர் குடத்தில் டேப்லெட்  போட்டு….  ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு… அதை யூஸ் பண்ணனும்…. அதை  அட்வைஸ் பண்ணி, இந்த டேப்லெட் கொடுப்போம்…..  ஒரு வீட்டுக்கு பத்து டேப்லட் கொடுப்போம்….  தூத்துக்குடிக்கும் எல்லா  ஏரியாவுக்கும் இந்த மாத்திரைகள் கொடுக்கிறதை உறுதிப்படுத்த போறோம்..

மழை வெள்ளத்தில் ஒரு சில ஏரியாக்களில் தண்ணீரில் எலி, பெருச்சாளி எல்லாம் செத்து கிடப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, 

அதுக்கு சானிட்டரி ஒர்க்கர்ஸ் பல பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இன்னைக்கு முதன்மைச் செயலாளர்களிடம் அதைப் பற்றி பேசியிருக்கிறோம்…  இன்னும் டீம்ஸ் அதிகம் படுத்துற அப்படின்னு சொல்லி இருக்காங்க…  அதனால் விரைவாக அந்தப் பணிகள் சரி செய்யப்படும். அங்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் அகற்றப்படும்.

அதே போல அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சு, இதையும் தாண்டி உங்களுக்கு வேற ஏதாவது விஷயம்.. மருத்துவதுறை சம்பந்தமான உதவிகள் எந்தப் பகுதிளாவது மக்கள் தேவைன்னு சொன்னாங்கன்னா…. நீங்க இம்மீடியட்டா எங்களுக்கு சொல்லுங்க….  இங்கு இருக்கிற டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் மூலமாக இன்ஃபர்மேஷன் பாஸ் பண்ணுங்க என வேண்டுகோள் வைத்தார்.