தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல துறைகளில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வுக்கான விடை குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடை குறிப்பை தேர்வர்கள் www.tnpsc.gov.in  என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் எனவும் அடுத்த ஏழு நாட்களுக்குள் விடை குறிப்பை தேர்வர்கள் அனைவரும் சரிபார்த்துக் கொள்ளும்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வாணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விடை குறிப்பே இறுதியான பதில் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.