தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ள நடப்பு ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி பெலோசிப் உதவித்தொகை தகுதி தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதில் மொத்தம் 120 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் CMRF தகுதி தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் என எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். PG இறுதி செமஸ்டரில் உள்ள மாணவர்களும் இந்த தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது