
என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஒரே ஒரு உதாரணத்தை சொல்றான் பாருங்கள்…. ஜெயம்கொண்டாண்ல விவசாயிகளை 25 வருடங்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு ஒரு அனல் மின் நிலையம் கட்டுவதாக உங்களுக்கு தெரியும், 1993ல சொன்னாங்க… திமுக ஆட்சிக்கு வந்த பொழுது 1997இல் கிட்டத்தட்ட 8,373 ஏக்கர் விவசாயிகள் கிட்ட இருந்து எடுத்தாங்க.
ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கொடுப்பதாக 8,373 ஏக்கர் எடுத்தாங்க… விவசாய பெருமக்கள் ஹை கோர்ட்டுக்கு போனாங்க…. உயர்நீதிமன்றத்துக்கு போனாங்க….. ஐயா இழப்பீடு பத்தாது அதிகமா கொடுங்கன்னு…. அந்த கேஸ் எல்லாம் நடந்து உயர்நீதிமன்றத்தில 2021 ஆம் ஆண்டு 42 மடங்கு இழப்பீடை உயர்த்தி ஒரு ஒரு விவசாய பெருமக்களுக்கும் ஒரு ஏக்கருக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.
அதை 8 லட்சமாக அரசு குறைத்தது… திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அனல் மின் நிலையத்தை நாங்கள் கட்ட போறது இல்லை… எந்த 8,373 ஏக்கர் நிலத்தை எடுத்தோமோ, திரும்ப கொடுத்து விடுகின்றோம்… பட்டாவை நீங்களே வச்சுக்கங்க…. விவசாய பெருமக்கள் ஜெயம்கொண்டானில் போராடி கொண்டிருக்கின்றார்கள்..
அப்போ 25 ஆண்டுகளாக எங்களுடைய பட்டாவை எடுத்துக்கிட்டு, அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்த நிலம் வேண்டும் என்று சொல்லி…. 35 ஆயிரம் கொடுப்பதாக சொல்லி…. கோர்ட்டில் 15 லட்சம், திரும்ப அரசு எட்டு லட்சமாக குறைத்து இன்னைக்கு எந்த பேச்சு இல்லாமல் சத்தமே இல்லாமல் 25 வருஷம் கழிச்சு அந்த நிலத்தை திரும்ப கொடுக்கின்றோம் என சொல்கின்றார்கள் என பேசினார்.