வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றுக்குள் புயலாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு அதாவது நவம்பர் 17 முதல் நவம்பர் 22 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி என்று இந்த புயலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.