
இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பிரிந்து போனவர்களை மாவட்டத்திற்குள்ளே இணைக்க சொல்லி இருக்கிறார்கள். முக்கியமான நிர்வாகிகளாக இருந்தா….
மற்ற மாற்று கட்சியில் இருந்து கழகத்தில் இணைய வந்தால் ? முக்கியமான நிர்வாகிகளா இருந்தா என்னிடம் அழைச்சிட்டு வாங்க. மற்றவர்களை மாவட்ட அலுவலகத்தில் வைத்து அங்கே சேர்த்துடுங்க என சொல்லி இருக்காங்க. நல்ல ஆலோசனைகளை மாவட்ட செயலாளர்களுக்கு… ஒரு பூஸ்ட்டை கொடுத்துள்ளார். ஒரு தலைவன் அதைத்தானே செய்யணும். அந்த தலைவன் இன்னைக்கு உழைத்தவர்களுக்கு நல்ல மரியாதை, பாராட்டுதல் கொடுத்திருக்கிறார்.
ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அம்மாவும் அதே மாதிரி தான்… தலைவரும் அப்படித்தான். இதுமாதிரி பாராட்டு தெரிவிப்பாங்க.அதே மாதிரி ஒரு பாராட்டுதலை எங்களுடைய பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி மிகச் சிறப்பாக எங்களை பாராட்டினார். அதற்காக எங்களுடைய பொதுச்செயலாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.