இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  எப்போது தேர்தல் வந்தாலும் தயாராக இருங்கள்  என  பொதுச்செயலாளர் சொல்லி இருக்கிறார். இது ஒன்னும் புதுசா இல்ல. டாக்டர் கலைஞரே விரும்பி ஏற்றுக்கொண்டது. கலைஞரே  செய்திருக்கிறார்.

1971லையும் செஞ்சி இருக்கரும்.  1980இல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சியை கலைச்சிட்டு,திரும்ப தேர்தல் கொண்டு வந்தவரும் நம்முடைய கலைஞர் தான். எனவே அவர் மிகப்பெரிய அரசியல்வாதி அல்லவா? எத்தனை ஆண்டு காலம் அரசியலில் பழுத்த பழம்  நம்முடைய கலைஞர். நாங்க அவருடைய வழியை தானே  பின்பற்ற வேண்டும்.

திமுக கூட மாறிருக்கலாம். திமுக கூட மாற்றி பேசலாம். ஆனால் நாங்கள் மாற்றி பேச மாட்டோம். அதிமுக கலைஞர் வழியில் செல்லுகின்றது என இல்ல. இந்த கருத்துக்கு தான் கலைஞர் வழி என சொன்னதாக சுதாரித்து பேசினார்.