இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி அவர்கள் புதியதாக துவங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் திரைப்படமாக தமிழில் “லெட்ஸ் கெட் மேரிட்” எனும் படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை டைரக்டர் ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளார். இப்படத்தில் நாயகனாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க, அவருக்கு ஜோடியாக லவ் டுடே திரைப்படத்தின் கதாநாயகி இவானா நடிக்க இருக்கிறார்.

மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு நடிக்க இருக்கின்றனர். இந்த படத்திற்கான பூஜை அண்மையில் நடந்ததை அடுத்து, புதிய கதாபாத்திரம் பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல தொகுப்பாளர் மிர்ச்சி விஜய் இணைந்து உள்ளதாக படக்குழு போஸ்டருடன் அதிகாரிவபூர்வமாக அறிவித்து உள்ளது.