தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளியாகிய “வாரிசு” படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று 250 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. வசூல் அதிகமாக இருப்பினும் வாரிசு படம் பல இடங்களில் தோல்வியை தழுவி உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் படத்திற்கு எதிர்பார்த்த அளவில் வசூல் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதேபோன்று தெலுங்கில் இப்படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்ப்போடு இருந்த தயாரிப்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து உள்ளது. தமிழகத்திலும் இப்படம் இன்னும் லாபக் கணக்கில் சேரவில்லை என கூறப்படுகிறது.