கன்னட சினிமாவின் பிரபல காமெடி நடிகரான மந்தீப் ராய் மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 72. இவர் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேற்கு வங்கத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மறைவிற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.