தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுபவர் தான் நடிகை லாஸ்லியா. இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பிறகு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு கூகுள் குட்டப்பா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இதனிடையே அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வரும் லாஸ்லயா தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் உடல் எடை குறைத்து மிக ஒல்லியான தோற்றத்துடன் காணப்படுகிறார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Losliya Mariyanesan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@losliyamariya96)