தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “லியோ”. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வந்த விக்ரம் படம் செம ஹிட் அடித்தது. இந்நிலையில் லியோ படம் ஓவர்சீஸில் மிகப் பெரிய வசூலை தரும் என தற்போதே கணித்துவிட்டனர்.

அதற்கு முக்கிய காரணம் என்னவெனில் விக்ரம் ஓவர்சீஸில் ரூ.52 கோடி வரை ஷேர் கிடைத்தது. இப்போது லியோ படத்தை வெளி நாடுகளில் ரூ.60 கோடி வரை விற்றுள்ளார்களாம். இதன் காரணமாக போட்ட பணம் வருமா என ஒரு கேள்வி எழுந்துள்ளது. இதையும் தாண்டி லாபத்தை தந்தால், தளபதி தான் தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத நம்பர் 1 நடிகர் தற்போது என சொல்லிவிடலாம்.