தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, திருமணம், குழந்தைகளுக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் மாதவன் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர் சித்தார்த் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஒய்-நாட் சசிகாந்த் முதன் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை அவரே தயாரிக்கிறார். அதோடு இப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் 3 பேரும் இணைந்து நடிக்கின்றனர். கிரிக்கெட் கதைக்களத்தை மையமாக கொண்டுள்ள இத்திரைப்படத்திற்கு “தி டெஸ்ட்” என தலைப்பு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.