வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தப் பாட்டி ஆடிய ஆட்டம் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. ஒரு விசேஷத்தில் பல பெண்கள் சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தபோது, நாகின் இசை ஒலிக்கத் தொடங்கியதும் இந்தப் பாட்டிக்கு எனர்ஜி கூடிவிட்டது.

கைகளைத் தூக்கிக் கொண்டு நாகின் ஸ்டைலில் அவர் ஆடியதும் போதாதென்று, திடீரென நாக்கைத் துருத்தி அவர் கொடுத்த எக்ஸ்பிரஷன்கள் தான் ஹைலைட்! நிஜமான ‘இச்சாத்தாரி நாகினி’யே நேரில் வந்தது போல அவர் ஆடியதை அங்கிருந்தவர்கள் கைதட்டி ரசித்தனர்.

இந்த வீடியோவை சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள நிலையில், “பாட்டி இன்னைக்கு நாமணி வாங்காம விடமாட்டாங்க போல”, “இந்தக் காலத்து நாகினிகள் இவரிடம் தான் டியூஷன் எடுக்கணும்” என நெட்டிசன்கள் காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.