அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகை வித்யா, விளையாட்டு பையனை எல்லாம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆக்குனா சமூக நீதி என ஒத்துக்க மாட்டோம். மாமன்னன் படத்தை பார்க்க குடும்பத்தோடு தியேட்டருக்கு போக தெரிஞ்ச ஸ்டாலின்க்கு, நான்குநேரியில் பிஞ்சி உயிர் வெட்டு பட்டு உயிர்க்கு போராடிட்டு இருக்கும் போது போக தெரிஞ்சதா ? பாக்க தெரிஞ்சிதா ? பொய் பாத்து இருந்தா அது சமூக நீதி.

ராஜீவ்காந்தி கொலை கேஸ்ல…  கைதிகளை விடுதலை பண்ணிங்க… விளம்பரம் கொடுத்தீங்க.. சந்தோஷம். அதே மாதிரி எத்தனையோ வருஷமா கஷ்டப்பட்டுகிட்டு  சிறையில் இருக்கிற முஸ்லிம் கைதிகளையும் விடுதலை செஞ்சிருந்தா அது சமூக நீதி. சரக்கு வித்து கமிஷன்  கொடுத்தவர் உள்ள போனாலும் அமைச்சர் தான். கட்சி மாறி வந்தாலும், நாலு இலாக்கா… கலெக்ஷன்,  கமிஷன், கரப்ஷன் சிறப்பா செஞ்சவருக்கு நாலு இலாக்கா… ஊழல் செஞ்சி அர்ரெஸ்ட் ஆனவரு. செந்தில் பாலாஜியை கைதை ஐகோர்ட் காரி துப்பிருக்கு.. ஆனாலும் அவர் அமைச்சர்.

அதே அமைச்சர் நாசர் தப்பு செஞ்சாரா ? ஊழல் செஞ்சாரா ? பதவி விட்டு தூக்கிட்டாரு… அமைச்சர் செஞ்சி மஸ்தானோட மகனும்,  மச்சானும் ஏதோ தப்பு செஞ்சாங்க. பதவி விட்டு தூக்கிட்டாரு…. தெரியாம தான் கேக்குறேன்…. அது என்ன இஸ்லாமிய அமைச்சர்கள் தப்பு செஞ்சா மட்டும் ஸ்டாலினுக்கு வலிக்குமா? கடுமையா  நடவடிக்கை எடுப்பாரா? இது என்ன சமூக நீதி என பேசினார்.