உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் பகுதியின் கோவிந்த் குண்ட் அருகே, இன்று (மே 5) சுமார் 20 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரமாக குரங்குகள் இறந்து கிடக்கும் காட்சியை காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. இது தொடர்பாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
यूपी : मथुरा के गोवर्धन इलाके में दर्जनभर से ज्यादा बंदरों की रहस्यमय तरीके से मौत हो गई। स्थानीय लोगों का आरोप है कि एक विदेशी साधु बाबा अक्सर एयर गन से बंदर भगाता था। पुलिस ने विदेशी बाबा को कस्टडी में लेकर पूछताछ शुरू की। मौत की वजह जानने के लिए बंदरों का PM कराया जा रहा।… pic.twitter.com/PWyrqbl9za
— Veer Arjun (@VeerArjunDainik) May 5, 2025
தகவலின்படி, மதுராவிலுள்ள ஜான்கி தாஸ் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு நபர், ஏர் கன் மூலம் குரங்குகளை சுட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஆரம்ப விசாரணையில், குரங்குகளின் உடலில் ஏர் கன் புல்லட் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த குரங்குகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கை வந்த பிறகு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மதுரா பகுதியின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “அனுமனின் வடிவமாகக் கருதப்படும் குரங்குகளைத் தாக்குவது மாறாகக் குற்றமாகும்.
குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
