டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் ரயிலைத் தவறவிடும் நிலையில் இருந்த பெண் ஒருவருக்கு, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தக்க சமயத்தில் உதவி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இந்திய ராணுவத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றிய தல்ஜித் சிங் என்பவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோவில் இருந்த பெண் அவரிடம் உதவி கோரினார். மதியம் 2 மணி 45 நிமிடங்களுக்கு ரயில் இருப்பதாகவும், ஆட்டோவில் சென்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ரயிலைத் தவறவிட நேரிடும் என்றும் அந்தப் பெண் பதற்றத்துடன் தெரிவித்தார்.
View this post on Instagram
பெண்ணின் இக்கட்டான நிலையை உணர்ந்த தல்ஜித் சிங், உடனடியாக அவரைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு டெல்லி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்றார். சரியான நேரத்திற்கு அந்தப் பெண்ணை ரயில் நிலைய வாசலில் இறக்கிவிட்டதோடு, அவரது பயணம் சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த மனிதாபிமானச் செயல் குறித்த காணொலி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் தல்ஜித் சிங் நாட்டு மக்களுக்குச் சேவை செய்து வருவதாகப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
