செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்த முறை மகளிர் தினத்திற்காக…. அவர்களுடைய வாழ்த்துக்காக….. 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல,  கடந்த 10 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில்,  பிரதமர் அவர்கள் 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார். அதில் அந்த வீட்டினுடைய பட்டா நம்முடைய தாய்மார்கள் பேரில்…  இலவசமாக அனைத்து வீடுகளுக்குமே டாய்லெட் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய தாய்மார்கள் பயன்பெற வீட்டுக்கு வீடு ஜல்ஜீவன் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிய பாராளுமன்றம்….. புதிய பாராளுமன்றத்தில் ஒரே ஒரு மசோதா தான் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா நம்முடைய தாய்மார்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கின்ற மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. மூன்று கோடி பேருக்கு லட்சாதிபதி ஆக்கும் சகோதரி திட்டத்தையும் நாம்  நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்.

அதனால் நாம் ஏதோ இன்றைக்கு தேர்தலுக்காக,  இதெல்லாம் செய்யவில்லை. நாம், நம்முடைய பிரதமர் அவர்கள்… நம்முடைய தாய்மார்கள்….. சகோதரிகளின் உடைய மேம்பாடு தான் முக்கியம் என்று கடந்த 10 ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார். எலிவேட்டர் ஹைவே…. அதற்கான அடிக்கல் இன்றைக்கு நாட்டப்பட்டிருக்கிறது. அதேபோல சேலத்தில் இருந்து தர்மபுரி செல்ல இருக்கின்ற அந்த தொப்பூரில் நான்கு கிலோமீட்டர்க்கு…..

தொப்பூர்  உங்களுக்கு தெரியும்…..  அதிகமான விபத்து நடக்கும் பகுதி….  அதனால் அங்கேயும் எலிவேட்டர் ஹைவே கொண்டு வருவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்றைக்கு நடந்திருக்கிறது. பிரதமர் அவர்களுடைய 2047 இல் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக பிரதமரின் உடைய கதிசக்தியின் கீழ் வேகமாக…. தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழ்நாட்டில் மிக அதிவேகமாக தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.